மனதில் தூறல் வீசியதே

அடைமழைக்கு முன் வரும் தூறல் போல
என் வாழ்க்கை துணையாய் நீ வந்தாயே…
தூறல் விழுந்து மண்ணில் மண்வாசனைப் போல,
என்னுள் மறைந்திருந்த உணர்வுகளை எழுப்பி விட்டாயே…

எழிலாய் நான் காணாத கனவுகளுக்கு 
நிறம் தீட்டி
காலையிலே சூரியனாய் புன்னகைத்தாய்…
சின்ன சின்ன தூறலாய்,
உன் வார்த்தைகளில் கூட
என் முழு உலககையும் அழகை நிரப்பினாய்…

மழைக்கு முன் வரும் காற்றுப் போல,
என் உள்ளம் முழுதும் நீயோ பரவினாய்…
இனி அடைமழை வந்தாலும் பயமில்லை
ஏனெனில், என் வாழ்க்கையே நீ ஆனாயே…!

Comments

Popular posts from this blog

BLUE SEA

The Day You Stepped Out Of The Womb

MYSTERIOUS DARK FOREST