என்னை செதுக்கிய சிற்பி


என்னை உருவாக்கி உயிர் கொடுத்து இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினவரே,
"அப்பா" என நான் அழைப்பதை கேட்கக் காத்திருந்தவரே,
எப்போதும் என்னை ஆசையாய் அணைத்து தோளில் சுமந்தவரே,
தன் இடுக்கண்களை மறைத்து என்னை வசதியாய் வளர்த்தவரே,
அழகிய சிற்பமாய் என்னை சிறிது சிறிதாய்  செதுக்கியவரே,
தன் கஷ்டங்களை மறைத்து என்னை சிரிக்க வைத்தவரே,
எனது நியாயமான ஆசைகள் ஓடோடி வந்து நிறைவேற்றுபவரே,
ஆணிவேராயிருந்து என்னை கீழே விழாமல் பற்றிக் கொண்டவரே,
துவண்டு போகையில் வார்த்தைகளால் என்னை தேற்றி தட்டிக்கொடுத்தவரே,
என் ஒவ்வொரு வெற்றியிலும் குதூகலமாய் துள்ளிக் குதித்தவரே,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் என் ஆருயிர்த் தந்தையே,
என்றும் எப்போதும் நீரே என் முதல் நாயகன்!

Comments

Popular posts from this blog

BLUE SEA

The Day You Stepped Out Of The Womb

MYSTERIOUS DARK FOREST